உலகம்

பிரித்தானியாவில் இலங்கை இளைஞன் எடுத்த அதிர்ச்சி முடிவு!

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வேண்டும் என்ற கனவு கண்ட இலங்கை மாணவர் அந்தரங்கப் புகைப்பட விவகாரத்தில் கொடூர முடிவை எடுத்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மிகவும் திறமைசாலி, இரக்க குணம் கொண்டவர் என கொண்டாடப்படும் 16 வயதேயான Dinal De Alwis என்ற மாணவரே தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டுள்ளார்.
கால்பந்து விளையாட்டு வீரர் என்பதுடன் ரக்பி விளையாட்டிலும் ஆர்வம் கொண்ட Dinal De Alwis அவரது GCSEல் அனைத்திலும் A* வாங்கியுள்ளார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார். ஆனால் 2022 அக்டோபர் மாதம் குடும்பத்துடன் Majorca சுற்றுலா முடித்து வந்த பின்னர் அவர் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அக்டோபர் 26ம் திகதி நள்ளிரவு தினாலுக்கு இரண்டு அந்தரங்கப் புகைப்படங்களை அனுப்பி வைத்த மர்ம நபர், 100 பவுண்டுகள் கேட்டு மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அல்லது அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட இருப்பதாகவும் மிரட்டியுள்ளனர். ஆனால் அந்த நபரால் தமது புகைப்படம் இணையத்தில் வெளியாகும் ஆபத்து இருப்பதை உணர்ந்து, குடியிருப்பில் இருந்து 2 மணிக்கு வெளியேறிய தினால், விபரீத முடிவு எடுக்கப்போவதாக கூறி காணொளி ஒன்றை பதிவு செய்து, பெற்றோருக்கு அனுப்பியுள்ளார்.


அதன் பின்னர் தினாலின் சடலம் மீட்கப்பட்டது. இந்த வழக்கில், தினாலை மிரட்டிய மர்ம நபரை பொலிசாரால் அடையாளம் காண முடியவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால் அந்த நபர் நைஜீரியாவில் இருந்து தினாலை தொடர்புகொண்டிருக்கலாம் என்று பொலிசார் உறுதி செய்துள்ளனர். தினாலின் அந்தரங்கப் புகைப்படங்கள் பெண் ஒருவரால் பதிவு செய்யப்பட்டு, தவறான கைக்கு சிக்கியிருக்கலாம் என்றே தந்தை Kaushallya நம்புகிறார். தினாலுக்கு சில பெண் தோழிகள் இருப்பது தமக்கு தெரியும் என்றும் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Back to top button