பிரான்ஸ்

இருளில் மூழ்கியது பரிஸ்!

பரிசின் வீதிகளில் உள்ள மின் விளக்குகள் திடீரென அணைந்து வீதிகள் அனைதும் இருளில் மூழ்கியுள்ளன. புதன்கிழமைக்கும்-வியாழக்கிழமைக்கும் இடைப்பட்ட இரவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ‘லீப் வருடத்தின் குழப்பம் காரணமாம கணணியில் ஏற்பட்ட திகதி பிழை காரணமாக இந்த தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக அது சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பரிசில் உள்ள மின் விளக்குகள் ஒளிரவிடுதற்குரிய ஒப்பந்தத்தை Cielis எனும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இரண்டரை ஆண்டுகள் ஒப்பந்தத்தில் இவ்வாண்டு ‘லீப்’ வருடமாக (நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும், பெப்ரவரி மாதத்தில் மேலதிகமாக ஒரு நாள் வருவதே லீப் வருடமாகும்) மேற்படி நிறுவனத்தின் கணணியில் அதனை பதிந்திருக்கவில்லை.

பெப்ரவரி 28 ஆம் திகதி நள்ளிரவின் பின்னர், மார்ச் 1 ஆம் திகதி என பதியப்பட்டுள்ளதால், மின் விளக்குகளுக்கான சமிக்ஞை கிடைக்கவில்லை. அதையடுத்து மிக விரைவாக இந்த குறை நிவர்த்தி செய்யப்பட்டு, சில நிமிடங்களிலேயே மின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டன. இந்த தடைக்காக Cielis நிறுவனம் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

Back to top button