தாயகம்

தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் தென்னை மரத்திலிருந்து தவறி கீழே வீழ்ந்து முதியவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 61 வயதான பிலிப்பையா ஜோய் பீரிஸ் என்பவர் கடந்த 24 ஆம் திகதி வல்லிபுரம் பகுதியில் தேங்காய் பிடுங்கச் சென்றுள்ளார்.

அப்போது, அவர் தென்னை மரத்தின் காய்ந்த ஓலையொன்றைப் பிடித்தபோது தென்னை மரத்திலிருந்து தவறி கீழே வீழ்ந்துள்ளார். இதனையடுத்து குறித்த நபரை முதற்கட்ட சிகிச்சைக்குப் பின்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (27-03-2024) இரவு உயிரிழந்துள்ளார்.


இவரது இறப்பு விசாரணைகளை யாழ். போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Back to top button