உலகம்

கனடா பொலிஸாரின் அறிவிப்பு! அதிர்ச்சியில் தமிழர்கள்!

#france# #canada#

கனடா – டொராண்டோ நகரில் கார் திருட்டு அண்மைக்காலமாக அதிகரித்துள்ள அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். புள்ளிவிபரங்களின் படி கடந்த ஆண்டுகளை விட 2023ம் ஆண்டில் டொராண்டோ பகுதியில் கார் திருட்டுகள் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,
காரை திருடும் திருடர்கள் வீடுகளில் புகுந்து பொருட்களை திருடிச் செல்வது கடந்த ஆண்டுகளை விட 400% அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருடர்கள் கார் சாவியை தேடுவதற்காக உரிமையாளர்களின் வீட்டிற்குள் நுழைகின்ற போது வீட்டின் பொருள்களையும் சேர்த்து திருடி செல்கின்றனர்.

எனவே கார் சாவியை காரிலோ அல்லது வீட்டின் முகப்பிலோ உரிமையாளர்கள் வைத்து விட்டால், கார் திருட வருபவர்கள் வீட்டினுள் நுழைந்து திருடுவது தடுக்கப்படும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸாரின் குறித்த அறிக்கை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், சமூக ஊடக தளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button