பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் உயிருக்கு போராடும் சிறுமி!

14 வயதுடைய சிறுமி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Fontenay-sous-Bois (Val-de-Marne) நகரில் சனிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. rue Rosenberg வீதியில் வைத்து மாலை 6.30 மணி அளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி மீது சிறுவன் ஒருவன் கத்தியால் தாக்குதல் மேற்கொண்டுள்ளான்.

அடிவயிற்றில் குத்தப்பட்ட சிறுமி படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். தாக்குதல் நடத்திய சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், அவரை சில மணிநேரங்களிலேயே காவல்துறையினர் கைது செய்தனர். சிறுவனின் தாய் மற்றும் சகோதரி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Back to top button