உலகம்

🔴பிரித்தானிய நோக்கிய பயணம்! பரிதாபமாக பலியான அகதிகள்!

பா-து-கலே கடற்பகுதியில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்பட்ட நான்கு அகதிகள் பலியாகியுள்ளனர். சனிக்கிழமை இரவு Wimereux (Pas-de-Calais) கடற்பகுதியில் இருந்து அகதிகள் சிலர் சிறிய படகு மூலம் பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்பட்டனர். சிறிய தூரம் பயணப்பட்ட நிலையில், பயணத்தை தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. அதிகாலை 2 மணி அளவில் படகு மூழ்க ஆரம்பித்துள்ளது.

மீட்புப்பணி அழைக்கப்படுவதற்குள் நிலமை கைமீறிச்சென்றுள்ளது. Abeille Normandie கடற்படையினர் தலையிட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தெரிவிக்கையில், நான்கு அகதிகள் பலியாகியுள்ளதாகவும், ஒருவர் உயிருக்காபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். முன்னதாக, டிசம்பர் 15 ஆம் திகதி இடம்பெற்ற இதேபோன்ற ஒரு பயணத்தில் இரு அகதிகள் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Back to top button