உலகம்

கனடாவில் மூன்றாண்டுகள் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் வீதி..!

கனடாவில் வீதியொன்றின் போக்குவரத்து மூன்றாண்டுகளுக்கு வரையறுக்கப்பட உள்ளது. கனடாவின் ரொறன்ரோவின் கார்டினர் அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து இவ்வாறு வரையறுக்கப்பட உள்ளது.
நேற்று முதல் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மிகவும் பழமையான இந்த பாதை பழுதுபார்க்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மூன்றாண்டுகள் இந்தப் பாதை புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

கார்டினர் அதிவேக நெடுஞ்சாலையின் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தைப் பயன்படுத்துவோர் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Back to top button