உலகம்

மூன்று நாட்கள் இருளில் மூழ்கும் உலகம்…எச்சரிக்கை விடுத்த ஜோதிடர்! பரபரப்பு தகவல்களால் அதிர்ச்சி!

மூன்று நாட்களுக்கு இருளில் மூழ்கும் என பிரபல ஜோதிடர் ஒருவர் எச்சரித்துள்ளார். பிரபல ஜோதிடர்
எலிசபெத் மகாராணியின் மரணம் முதல் எலான் மஸ்க் ட்விட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள், பிரித்தானிய மன்னர் சார்லசுக்கு சிறுநீரக மற்றும் இனப்பெருக்க அமைப்பில் பிரச்சினைகள் என பல விடயங்களை துல்லியமாக கணித்தவர், வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பிரபல ஜோதிடக்கலைஞரான ஏதோஸ் (Athos Salomé).

உலகம் மூன்று நாட்களுக்கு இருளில் மூழ்கும்
இந்நிலையில், உலகம் மூன்று நாட்களுக்கு இருளில் மூழ்கும் என எச்சரித்துள்ளார் ஏதோஸ்.விடயம் என்னவென்றால், சூரியப் புயல் ஒன்று உருவாகும் என தான் கணித்தது உண்மையாகியுள்ளது என்று கூறும் ஏதோஸ், ஞாயிற்றுக்கிழமையன்று, சூரியனிலிருந்து coronal mass ejection (CME) என்னும் விடயம் வெளியாகியுள்ளதாக தெரிவித்துளார்.
அதனால் காந்த சக்தியுடைய சூரியக் கதிர்கள் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக அவர் கூறும் நிலையில், 2017க்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை, அதாவது மார்ச் மாதம் 24ஆம் திகதி வெளியான சூரியப் புயல்தான் மிகப்பெரிய சூரியப் புயல் என்றும் கருதப்படுகிறது.

இதற்கிடையில், ஏப்ரல் மாத துவக்கத்தில் முழு சூரிய கிரகணம் ஒன்று நிகழ இருப்பதாக ஏதோஸ் நம்புகிறார். இந்நிலையில், உலகம் மூன்று நாட்கள் இருளில் மூழ்கும் என்ற ஏதோஸின் எச்சரிக்கையுடன் இந்த சூரியப் புயலும், சூரிய கிரகணமும் இணையுமானால், ஏதோஸ் கூறியதுபோலவே மூன்று நாட்கள் உலகம் இருளில் மூழ்கலாம் என கருதப்படுகிறது.

Back to top button