பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் மூடப்படும் வாகன சேவை! வெளியான காரணம்!

பிரான்சின் மிகப்பெரும் வாகன உற்பத்தி நிறுவனமான ‘Renault’ நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து ‘Zity’ எனும் வாடகை வாகன சேவையை நடத்தி வந்தநிலையில் அந்த சேவையை எதிர்வரும் 15 ஜனவரியுடன் தாங்கள் மூடப் போவதாக அறிவித்துள்ளது.
சுமார் 100 000 வாடிக்கையாளர்கள் பாரிஸ் முழுவதும் இருக்கும் நிலையில், லாபகரமான சேவையாக தங்களின் ‘Zity’ இல்லை எனக்கூறி தனது சேவைகளை Renault நிறுவனம் மூடுகிறது.

இதற்கான அறிவித்தலை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளது. குறித்த சில நிமிடங்கள் அல்லது சில மணித்தியாலங்கள் வாடகைக்கு பெறும் வகையில் இயங்கிவந்த ‘Zity’ மகிழ்வூர்ந்து சேவையில் மின்சாரத்தில் இயங்கும் Renault Zoé மற்றும் Dacia Spring எனும் சிறியரக மகிழ்வூர்ந்துகள் சேவையில் இருந்தன. வரவை விடவும் பராமரிப்பு செலவுகள், சேதமடைதல், தரிப்பிட செலவுகள் என செலவுகள் அதிகம் எனவும், தாம் எதிர்பார்த்து போல் சேவைகள் இயங்கவில்லை எனவும் ‘Renault’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Back to top button