பிரான்ஸ்

பிரான்ஸில் பெண் ஒருவருக்கு நிகழ்ந்த கொடுமை!

பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பரிஸ் 18 ஆம் வட்டாரத்தின் rue Capron வீதியில் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, வீதியின் அருகே வைத்து 28 வயதுடைய பெண் ஒருவரை நபர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக்கொண்டிருப்பதை அவதானித்தனர்.

அதிகளவு மது உட்கொண்டிருந்த குறித்த பெண்ணுக்கு, அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பது தெரிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் Bichat மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Back to top button