பிரான்ஸ்

பிரான்ஸில் அதிர்ச்சி சம்பவம்! சடலமாக மீட்கப்பட்ட சடலம்!

கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி காணாம போன வயதான பெண்மணி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 73 வயதுடைய Joséphine Melacheo எனும் பெண்மணியே கடந்த 27 ஆம் திகதி காணமல் போயிருந்தார்.

இந்நிலையில் அவர் ஒருவாரத்தின் பின்னர் நேற்று அவரது வீட்டில் இருந்து 5 கி.மீ தொலைவில் Cormeilles-en-Parisis (Val-d’Oise) பகுதியில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டார்.

பாதசாரிகள் சிலர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், குறித்த பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்து அவசர இலக்கத்தினை அழைத்துள்ளனர்.
Ermont நகர காவல்துறையினர் மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Back to top button