பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸின் புதிய பிரதமர்! வெளியான அறிவிப்பு!

பிரான்சின் புதிய பிரதமராக கேப்ரியல் அத்தால் (Gabriel Attal) நியமிக்கப்பட்டுள்ளார். ஐந்தாம் குடியரசின் மிக இள வயது பிரதமர் இவராவார். முன்னாள் பிரதமர் Elisabeth Borne நேற்று திங்கட்கிழமை மாலை பதவி விலகியிருந்தார். அவரது சேவைகளுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நன்றி தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், இன்று காலை புதிய பிரதமராக கேப்ரியல் அத்தால் அறிவிக்கப்பட்டார். அவரே பிரதமராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதன்படி கல்வி அமைச்சராக இருந்த கேப்ரியல் அத்தால் இன்று பிரதமராக அறிவிக்கப்பட்டார். 34 வயதுடைய அவர் பிரான்சின் ஐந்தாம் குடியரசின் இளவயது பிரதமராவார்.

Back to top button