பிரான்ஸில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
மகிழுந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதை அடுத்து, மகிழுந்தைச் செலுத்திய 59 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மார்ச் 25 ஆம் திகதி, திங்கட்கிழமை இச்சம்பவம் Vert-Saint-Denis (Seine-et-Marne) நகரின் அருகே உள்ள D306 சாலையில் இடம்பெற்றுள்ளது. காலை 10 மணி அளவில் குறித்த நபர் மகிழுந்தில் பயணித்துள்ளார்.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
சில நிமிடங்களிலேயே மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்தது. வீதியை விட்டு அகன்று சென்று அருகில் இருந்த மரத்தில் பலமாக மோதி நொருங்கியது. சில நிமிடங்களில் மகிழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. தீயணைப்பு படையினருக்கு எச்சரித்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தடையும் முன்னர் நிலமை கைமீறிச் சென்றது. அவர் பலியான நிலையில், அவரது சடலத்தை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
Draveil (Essonne) நகரைச் சேர்ந்த அவர், 1964 ஆம் ஆண்டு பிறந்த 59 வயதுடையவர் எனவும், சம்பவத்தின் போது இருக்கைப் பட்டி (ceinture de sécurité) அணிந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.