தாயகம்

கொழும்பில் பயங்கர சம்பவம்! விசாரணை மேற்கொள்ளும் பொலிசார்!

கொழும்பு – பொரளை சந்தியில் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொரளை சந்தியில் அதிவேகமாக பயணித்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


குறித்த விபத்தின் போது அவ்வழியாகச் சென்ற மற்றொரு வேனும், காரும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்டு வருதாக தெரிவித்தனர்.

Back to top button