பிரான்ஸ்

பிரான்ஸில் கத்திக்குத்து! வெளியான அதிர்ச்சி காரணம்!

21 வயதுடைய துனிசிய பிரஜை தன்னுடன் வேலை செய்பவரைக் கத்தியால் குத்தி உள்ளார். இந்தச் சம்பவம் வலோன்ஸ் நகரில் (Valence – Drôme) நடந்துள்ளது.

விரைவு உணவகத்தில் வேலை செய்யும் இநதத் துனியிசியப் பிரஜை தன்னுடன் வேலை செய்யும் 26 வயதுடையவரே குத்தி உள்ளார். சலாட் வெட்டவில்லை என்ற ஒரு வாக்குவாதத்தின் பின்னரே இந்தக் கத்திக்குத்துச் சம்பவம் நடந்துள்ளதாகக் காவற்துறையினரின் முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இப்பொழுதெல்லாம் ஒன்றுக்கும் உதவாத சிறு காரியங்களிற்கே கொலை முயற்சி வரை செல்வது அச்சமூட்டுகின்றது.

Back to top button