பிரான்ஸ்

பிரான்ஸில் வரும் புதிய சட்டம்! அவர்களின் முடிவு அவர்களின் கையில்!

#france news#

உடல் ரீதியாக கடுமையான நோய்க்கு உள்ளான நோயாளிகள் தங்களை தாங்களே வாழ்க்கையில் இருந்து விடுவித்துக் கொள்ள முடிவெடுக்கும் தகுதியை வழங்கும் மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் மே 27 அன்று விவாதத்துக்கு வர உள்ளது. நீண்ட இழுபறிக்கு பின்னர் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. கத்தோலிக்க நாடான பிரான்ஸ் தேசத்தில் ஒரு நோயாளி தன்னை இந்த உலகத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள முடிவெடுப்பதை கத்தோலிக்கம் கடுமையாக எதிர்த்து வரும் நிலையிலேயே இந்த மசோதா விவாதத்திற்கே வருகிறது.

ஐரோப்பாவில் சுவீஸ் பெல்ஜியம் போன்ற நாடுகள் நோயால் பாதிக்கப்பட்டு தம்மைத் தாமே இயங்கிக் கொள்ள முடியாவர்களும், கடும் உடல் வலியினால் மருந்துகளோடு வாழ்பவர்களும் தங்களை தற்கொலை செய்து கொள்ள அல்லது மருத்துவரின் உதவியோடு தான் இந்த உலகத்தில் இருந்து விடை பெற விரும்பும் மருத்துவச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது.

கருணை கொலை’ என்று அழைக்கப்படும் மருத்துவ உதவியோடு தம் உயிரை மாய்த்துக்கொள்ளும். உரிமையை அந்த நோயாளிக்கு வழங்கும் சட்டம் பிரான்சில் நடைமுறைக்கு கொண்டுவர பல ஆண்டுகளாக மருத்துவத் துறை அரசோடு போராடி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Back to top button