தாயகம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்!
பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் புதிய சோதனைக் கருவி (Automated Facial Recognition System) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் வரும்போது அல்லது வெளியேறும்போது அவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.