தாயகம்

கட்டுநாயக்க விமானத்தில் கைதான இரு யாழ் தமிழ் இளைஞர்கள்!

வடபகுதியை சேர்ந்த இரண்டு தமிழ் இளைஞர்கள் இன்று(23) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியாக தயாரிக்கப்பட்ட விசா மூலம் ஐரோப்பா செல்ல முற்பட்ட நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரேக்க சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட கிரேக்க சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி ஐரோப்பா செல்ல முற்பட்ட நிலையில் இவர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.

இன்று அதிகாலை 4.35 மணியளவில் தோஹா நோக்கிப் புறப்படவிருந்த கத்தார் எயார்வேஸின் QRR-663 விமானத்தில் பயணிப்பதற்காக இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Back to top button