பிரான்ஸ்

பிரான்ஸில் பூட்டப்பட்ட ஈபிள் கோபுரத்தால் ஏற்பட்ட நிலை!

ஈஃபிள் கோபுர ஊழியர்கள் கடந்த வாரம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தமை அறிந்ததே. இந்த வேலை நிறுத்தத்தின் போது கிட்டத்தட்ட 2 மில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுறது. கடந்த திங்கட்கிழமை (பெப்ரவரி 19) முதல் சனிக்கிழமை வரையான ஆறு நாட்களும் ஈஃபிள் கோபுர ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதன் போது ஒரு பல மில்லியன் பார்வையாளர்களை இழந்திருந்தது.
தொழிற்சங்கத்துக்கும் ஈஃபிள் கோபுரத்தின் இயக்குனரகத்துக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை சனிக்கிழமை மாலை தீர்க்கப்பட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் கோபுரம் திறக்கப்பட்டது.
இந்த ஆறு நாட்கள் இடைவெளியில் மொத்தமாக 2 மில்லியன் யூரோக்களினை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button