பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் அறிமுகமாகும் புதிய பணத்தாள்!

பிரான்சில் €0 யூரோ பணத்தாள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பெறுமதி அற்ற பணத்தாள் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் விற்பனைக்கு வருகிறது. 1944 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்த தினத்தை நினைவுகூறும் விதமாக இந்த பணத்தாள் அச்சிடப்படுகிறது. 3,000 தாள்கள் மட்டுமே அச்சடிக்கப்படும் இது ஒரு ‘அரிதான’ பொக்கிஷமாக பாதுகாக்கக்கூடிய, எதிர்காலத்தில் அதிக தொகைக்கு கிடைக்கக்கூடிய பணத்தாளாக அச்சடிக்கப்படுகிறது.


000001 இலக்கம் முதல் 003,000 இலக்கம் வரை கொண்ட இந்த பணத்தாளினை கடைகளில் கொடுத்து எதனையும் வாங்க முடியாது. ஆனால் குறித்த பணத்தாள் மிகவும் பெறுமதி மிக்கது எனவும், வங்கிகளில் முதலில் வருபவர்களுக்கு முதலில் கிடைக்கும் வகையில் விற்பனை செய்யப்பட உள்ளது. எதிர்காலத்தில் இதன் மதிப்பு பல மில்லியன்களுக்குச் சென்றுவிடும் என தெரிவிக்கப்படுகிறது.

Back to top button