பிரான்ஸ்

பிரான்ஸ் வதிவிட உரிமையை நீக்குக! உள்துறை அமைச்சரின் கோரிக்கை!

இஸ்லாமிய மதத்தலைவரான இமாம் ஒருவரது வதிவிட உரிமையை நிரந்தரமாக நீக்கவேண்டும் என உள்துறை அமைச்சர் கோரியுள்ளார்.
உள்துறை அமைச்சர் Gérald Darmanin நேற்று ஞாயிற்றுக்கிழமை, இந்த கோரிக்கையை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனிடம் தெரிவித்துள்ளார். Gard மாவட்டத்தில் இமாமாக செயற்பட்டு வரும் குறித்த மதபோதகர் பிரான்சுக்கு எதிரான பல்வேறு விஷம கருத்துக்களை இஸ்லாமிய மாணவர்களிடம் விதைத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.


”வெறுப்பை உமிழும் எந்த ஒரு செயலையும் நியாயப்படுத முடியாது!” என தெரிவித்த உள்துறை அமைச்சர், மேற்படி இமாமை பிரெஞ்சு வதிவிட உரிமையை இரத்துச் செய்து, அவரை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான அழைப்பை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார். குறித்த இமாம் சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளத்தில் காணொளி ஒன்றை பதிவேற்றியிருந்தார். அதில், “அல்லாவின் பார்வையில் பிரெஞ்சு கொடிக்கு எவ்வித மகத்துவமும் இல்லை. அது ஒரு சாத்தானிய கொடி’ என தெரிவித்திருந்தார். அதையடுத்தே அவரது கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

Back to top button