பிரான்ஸ்

பிரான்ஸில் TGV Inoui அதிகரிக்கப்படும் கட்டணங்கள்!

TGV Inoui தொடருந்துகளுக்கான கட்டணம் விரைவில் அதிகரிக்கப்பட உள்ளது. இன்று புதன்கிழமை இத்தகவலை SNCF அறிவித்துள்ளது.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.6% சதவீதத்தால் இந்த கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது.

ஆனால் இந்த கட்டண உயர்வு carte Avantage அட்டை வைத்திருப்போருக்கு இல்லை எனவும், ஏனைய பயணிகளுக்கே இந்த கட்டண உயர்வு அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TGV Inoui தொடருந்துகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டு 6% சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button