இந்தியாஉலகம்

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித் குமார்! பரபரப்பில் திரையுலகம்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் நடிப்பில் இறுதியாக துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்தோடு இப்படம் வசூலிலும் அள்ளிக் குவித்தது. தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹீரோவாக திகழும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலை பிட்டாக வைத்துள்ளதோடு, சற்று மெலிந்தும் போய்விட்டார் நடிகர் அஜித்.
இந்த நிலையில், நடிகர் அஜித் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது.

திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது. எனினும் இதற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், இதையறிந்த பிரபலங்களும், ரசிகர்களும் குழம்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button