பிரான்ஸ்

பிரான்ஸ் மக்களின் ஆணை! நாடு கடத்துங்கள்!

பிரான்சிற்கு எதிராக, கடும் இஸ்லாமிய ஜகாதிப் பயங்கரவாதப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் துனிசிய இமாமின் வதிவிட உரிமையபை பறித்து, நாடுகடத்த உள்துறை அமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பிரபல ஊடகம் பெரும் கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளது.

எந்த விதமான மேல் முறையீட்டிற்கும் சந்தர்ப்பம் வழங்காது, உடனடியாக, இமாம் மஹ்ஜுப் மஹ்ஜுபியை நாடுகடத்த 92 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் 7 சதவீத மக்கள் நாடுகடத்தலிற்கு எதிராகவும், 1 சதவீத மக்கள் எந்தப் பதிலும் அளிக்காமலும், இருந்ததாக இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.


பிரான்சிற்கு எதிரான, பயங்கரவாதப் பிரச்சாரம் செய்தமைக்காக மஹ்ஜுப் மஹ்ஜுபிக்கு எதிராக பயங்கரவாதத் தடைப்பிரிவு விசாரணைகளை ஆரம்பிக்க, இவர் பிரச்சாரம் செயய்யும் பள்ளிவாசல் உள்ள பன்யோலே-சூர்-செஸ் (Bagnols-sur-Cèze – Gard) நீதிமன்றம் ஆணையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button