பிரான்ஸ்

பிரான்ஸ் நவிகோ பயணிகளுக்கு இழப்பீடு!

#france#

சென்ற ஆண்டு போக்குவரத்து தாமதத்தைச் சந்தித்த RER பயணிகளுக்கு இழப்பீடு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற அண்டு போக்குவரத்து தாமதத்தில் RER சேவைகள் 80% சதவீதத்துக்கும் குறைவான புள்ளிகளை பெற்றிருந்தது.

அதையடுத்து தாமதங்களைச் சந்தித்த நவிகோ பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான இணையத்தளம் நாளை மார்ச் 20 ஆம் திகதி திறக்கப்பட்டதாக Ile-de-France Mobilités (இல் து பிரான்சுக்கான பொது போகுவரத்து சபை) அறிவித்துள்ளது.
குறிப்பாக RER A, B, C, D மற்றும் P வழிச் சேவைகளுக்காக இந்த இழப்பீடு வழங்கப்பட உள்ளது. அவர்களுக்கு நவிகோ பயண அட்டையின் விலையில் பாதியான €42.05 யூரோக்கள் இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

Back to top button