பிரான்ஸில் பாதிக்கப்பட்டுள்ள 4500 இளம்பெண்கள்! கடும் குற்றச்சாட்டு!
பிரான்ஸ் திரைப்படத்துறையினரால் தாங்கள் சீரழிக்கப்பட்டதாக 4,500 இளம்பெண்கள் புகாரளித்துள்ளதாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
முன்னணியில் நிற்கும் நடிகை பிரபல பிரெஞ்சு நடிகையான ஜூடித் (Judith Godreche) என்பவர், பிரான்சில் MeToo அமைப்பு சார்பில், பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்காக குரல் கொடுத்துவருகிறார்.
இந்த நடிகை ஜூடித், தான் நடிக்க வந்த புதிதில், தனக்கு 14 வயதே இருக்கும்போது, Benoit Jacquot மற்றும் Jacques Doillon என்னும் இரண்டு இயக்குநர்கள் தன்னிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் பேசிய ஜூடித், திரைத்துறையினரால் இளம்பெண்கள் ஏராளமானோர் சீரழிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை, தாங்கள் சீரழிக்கப்பட்டதாக 4,500 இளம்பெண்கள் தன்னிடம் புகாரளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திரைத்துறையில் பெண்கள் மோசமாகவும், பாரபட்சத்துடனும் நடத்தப்படுவது மற்றும் பாலியல் ரீதியில் தாக்கப்படுவது தொடர்பில் விசாரணை நடத்த, ஆணையம் ஒன்றை உருவாக்குமாறும் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.