பிரான்ஸ்

பிரித்தானிய நோக்கிய பயணம்! தடுக்கப்பட்ட அகதிகள்!

பா-து-கலே பகுதியில் இருந்து சிறிய மீன்பிடி படகுகள் மூலம் பிரித்தானியா நோக்கி பயணித்த 132 அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை பெப்ரவரி 17 ஆம் திகதி நேற்று அதிகாலை இந்த மீட்பு பணி இடம்பெற்றது. முதலில் 57 அகதிகளுடன் படகு ஒன்று பயணித்திருந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டிருந்தனர்.

எவ்வித பாதுகாப்பும் ஒன்றி உயிர்காக்கும் உடையினை நம்பி அவர்கள் கடலில் பயணித்துள்ளனர். பின்னர் சிலமணிநேரம் கழித்து மீண்டும் ஒரு படகு 75 அகதிகளுடன் பயணித்த நிலையில் அவர்களும் மீட்கப்பட்டனர்.
கடலோர எல்லை பயணங்களை கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டுவரும் அமைப்பான centre régional opérationnel de surveillance et de sauvetage (CROSS) இந்த மீட்பு பணிகளை மேற்கொண்டிருந்தது.

Back to top button