பிரான்ஸ்

🇫🇷விசேட செய்தி! பிரான்ஸ் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டின் 80 சதவீதமான மாவட்டங்களுக்கு பனிப்பொழ்வு காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இல் து பிரான்சின் இரு மாவட்டங்களுக்கு வெள்ளம் மற்றும் பனிப்பொழிவு காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Essonne மற்றும் Yvelines ஆகிய இல் து பிரான்சைச் சேர்ந்த மாவட்டங்களுக்கு பனிபொழிவு காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, Nord(59) மற்றும் Pas-de-Calais(62) ஆகிய மாவட்டங்களுக்கும் வெள்ளம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் வீதிகளில் மெதுவாக பயணிப்பதை தொடர்ந்து, நேற்று இரவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Back to top button