பிரான்ஸ்

பிரான்ஸில் அதிகரிக்கப்படும் பாதுகாப்பு! வெளிவந்த முக்கிய காரணம்!

காசா வளையப் பகுதியில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலின் யுத்தங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் பிரான்சில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பிரான்சின் யூத மதவழிபாபாட்டு மையங்கள், யூத கலாசார, கல்வி மையங்களிற்கு அதியுச்சப் பாதுகாப்புகள் பலப்படுத்தபபட்டுள்ளதாக இன்று பிரான்சின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஹமாசின் எதிர்ப்பு, பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஐரோப்பிய நாடுகளிற்கு ஏற்பட்டுள்ள நிலையில்,

முக்கியமாகப் பிரான்சிற்கு கடுமையான பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளமையால், தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரான்சின் உள்ளக மற்றும் வெளியகப் புலனாய்வுத்துறையினர் மிகத் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

Back to top button