ஜோதிடம்

2024ம் ஆண்டு கடக ராசியினருக்கு எப்படி இருக்கும்?

தடங்கல்.. எச்சரிக்கை.. விடாமுயற்சி.. வெற்றி

2024ம் ஆண்டுக்கு மே மாதத்திற்கு பிறகு பண பலன்கள் வந்து சேரும் என்பதால் எச்சரிக்கையாக இருந்து புதிய சொத்துக்களை வாங்கலாம். ஆனால் மிக மிக கவனமாக இருப்பது நல்லது.

2023 ம் ஆண்டில் பலருக்கும் மகிழ்ச்சியான விஷயங்கள் நடந்துள்ளது. சிலர் தங்கள் வாழ்வில் சில தடங்கல்களை கடந்திருக்கலாம். ஆனால் இனி வரும் புத்தாண்டில் நம் வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்று நம்பிக்கையோடு விடாமுயற்சியுடன் நாம் முன்செல்வோம். இந்நிலையில் 2024ம் ஆண்டில் கடக ராசியினரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

தொழில்

2024ல் ஆரம்ப நாட்களில் கடகராசிகாரர்களை பொறுத்த மட்டில் குரு பத்தாம் இடத்தில் இருக்கிறார். இதனால் 2023ம் ஆண்டை போலவே 2024 லும் ஏப்ரல் வரை பெரிய வெற்றிகள் தொழிலில், வருமானத்தில் வந்து சேராது. பணியிடத்தில் மந்த நிலையிலேயே இருப்பீர்கள். இதனால் புத்தாண்டையொட்டி புதிய தொழில் தொடங்குதல் கூட்டு தொழில் தொடங்குவது என்பது போன்ற முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. இருக்கும் வேலையை விட்டு புதிய வேலைக்கு மாறுவதாற்காக அவசரப்பட்டு பிறகு சிக்கலில் மாட்டி கொள்ள வேண்டாம்.

ஆனால் 2024 மே மாதம் வியாழன் பெயர்ச்சி நடைபெற்ற பின் குரு 11ம் இடத்திற்கு செல்லும். இது லாப ஸ்தானத்தில் குரு வருவதை குறிக்கும். குரு பணத்தை கொடுக்கும் இடத்தில் இருக்கும்போது அதை தடுக்கும் ராகு கேது இல்லை. 8 ம் இடத்தில் சனி இருப்பார். ஆனால் சனி தடுக்கும் இடத்தில் இல்லாமல் தடையை குடுக்கும் இடத்தில் மட்டும் தான் இருப்பார். இதனால் நீங்கள் மீண்டும் மீண்டும் போராடி முயன்றால் வெற்றி சாத்தியம் ஆகும்.

சொத்து

2024ம் ஆண்டுக்கு மே மாதத்திற்கு பிறகு பண பலன்கள் வந்து சேரும் என்பதால் எச்சரிக்கையாக இருந்து புதிய சொத்துக்களை வாங்கலாம். ஆனால் மிக மிக கவனமாக இருப்பது நல்லது.

காதல் திருமணம்

மே மாதத்திற்கு பிறகு கடக ராசிகாரர்களுக்கு காதல், திருமணம் போன்ற விஷேசங்கள் நிகழ்வுகள் கைகூட அதிக வாய்ப்புள்ளது. குருபகவான் அதற்கு துணை நிற்பார். ஆனால் சனி 2025 மார்ச் மாதம் வரை 8ம் இடத்தில் இருப்பதால் ஆரம்ப காலத்தில் தம்பதிகள் இடையே ஒத்து வராத சூழல், சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரக்கூடும். இதனால் தீவிர வாக்குவாதங்களை தவிர்க்கலாம். இந்த மனநிலைக்கும் தயாரான பின் திருமணத்தை நடத்துவது மிகவும் நல்லது.

பெண்கள்

கடகத்தில் பிறந்த குடும்ப பெண்கள் மனதில் இனம் புரியாத கவலை ஏக்கம், அதிருப்தி போன்றவை இருக்கும். இதனால் எதிர்பார்பை மிக மிக குறைத்து கொள்வது நல்லது. ஏதாவது ஒரு மந்திரத்தை தினந்தோறும் உச்சரித்து கடவுளை வணங்குவது நல்லது.

ஆரோக்கியம்

8ம் இடத்தில் சனி இருப்பதால் ஆரோக்கியம் மிக மிக முக்கியம். இதனால் இந்த காலகட்டத்தில் புதிய முயற்சிகள், உணவு, லாங் டிரைவிங், ட்ரக்கிங் என ரிஸ்க் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. காரணம் எத்தனை பணம் இருந்தாலும் உடல் நலத்துடன் இருந்தால் மட்டும் தான் அதை அனுபவிக்க முடியும் இதனால் முடிந்த வரை ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு, நிம்மதியாக தூங்கி, எளிய உடற்பயிற்சிகளை செய்து கொள்வது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Back to top button