ஜோதிடம்

மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள்! விடிவுகாலம் எப்போது?…

மிதுனம் – Guru Peyarchi Palangal 2023 – 2024 (TAMIL)
ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2023-2024 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

மிதுனம் – குரு பெயர்ச்சிப் பலன்கள்
உலகில் அனைத்தையும் உழைப்பால் அடைய வேண்டுமென நினைக்கும் மிதுன ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து பலவிதங்களிலும் தொல்லை தந்துவந்த குருபகவான் 22.4.23 அன்று பெயர்ச்சியாகி 1.5.24 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து பலன் தர இருக்கிறார். இனி தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும். மனதில் உற்சாகம் பெருகும். பணவரவும் அதிகரிக்கும். வருமானம் உயரும். ஷேர் மூலம் பணம் வரும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தேடிவரும். உறவினர்களிடையே மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய வீடுகளைப் பார்ப்பதால் இளைய சகோதரருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பூர்விக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் தீரும். பேச்சில் தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். மகன் அல்லது மகளின் திருமணம் சிறப்பாக நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் வாய்க்கும். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும். அரசாங்க விஷயங்களில் இருந்து வந்த பின்னடைவுகள் நீங்கும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
22.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை
குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சந்ரிப்பதால் பணவரவு அதிகரிக்கும். புதிய திட்டங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் அதிரடி மாற்றங்கள் உண்டாகும்.

23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை

இந்தக் காலகட்டத்தில் சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். வழக்கில் வெற்றி உண்டு. வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

17.4.2024 முதல் 1.5.2024 வரை

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அதனால் நல்ல பலன்கள் உண்டாகும். செல்வாக்குக் கூடும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம் 11.9.2023 முதல் 20.12.2023 வரை

குருபகவான் இந்தக் காலகட்டத்தில் அஸ்வினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். என்றாலும் வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். பணவரவு உண்டு.

வியாபாரிகள் : தொழிலில் இருந்த சுணக்கம் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். புதிய சலுகைகள் அறிவித்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். புதிய முதலீடுகள் மூலம் கடையை விரிவுபடுத்துவீர்கள். பக்குவமான பணியாளர்கள் கிடைப்பார்கள். ஏப்ரல், மே மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கெமிக்கல், ஹோட்டல், கமிஷன், இரும்பு வகைகளால் லாபம் உண்டு.

உத்தியோகஸ்தர்கள் : அலுவலகச் சூழலில் இருந்த அவமானங்கள் நீங்கும். உங்கள் மதிப்பு அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தேடிவரும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். வேலைச்சுமை குறையும். ஜூன், மார்ச், ஏப்ரல் மாதங்களில் முன்னேற்றம் உண்டாகும். மூத்த அதிகாரிகள் பாராட்டுவர். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு உண்டாகும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி தடைகளை நீக்கி உங்களை சாதனையாளராக மாற்றும்.

Back to top button