ஜோதிடம்

பண மழை கொட்டும்.. ஆண்டியும் அரசன் ஆகலாம்.. சிங்கம் போல மாற போகும் அந்த ராசி.. குரு பெயர்ச்சி பலன்!

2024ல் நடக்க உள்ள குரு பெயர்ச்சி சிம்ம ராசிதாரர்களின் வாழ்க்கையில் பல அடிப்படை விஷயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.. முக்கியமாக பொருளாதார ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும்.. இந்த குரு பெயர்ச்சி மூலம் என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம். குரு பெயர்ச்சி.. இது ஜோதிடத்தில் நடக்கும் அரிய நிகழ்வுகளில் ஒன்றாகும். ஒரு கிரகம் இடம் மாறுவது என்பது பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

அதுவே அந்த கிரகம் குருவாக இருந்தால் பல்வேறு ராசிகளுக்கு வித விதமான பலன்களை கொடுக்கும். குரு பார்க்கும் இடத்தை பொருத்து சிலருக்கு நல்லதும்.. சிலருக்கு கெட்டதும்.. சிலருக்கு கலவையான பலன்களும் கிடைக்கும். குரு பெயர்ச்சி நடக்கும் போதெல்லாம் பல ராசிகளுக்கு வாழ்க்கை அப்படியே பாசிட்டிவாக மாறிய சம்பவங்கள் நடந்துள்ளன. ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். தற்போது மேஷ ராசியில் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். மே 1ம் தேதி நடக்கும் இந்த மாற்றத்தால் பல ராசிதாரர்களின் வாழ்க்கை அப்படியே மாற போகிறது. அந்த வகையில் சிம்ம ராசிக்கான பலன்களை இங்கே பார்க்கலாம். பண மழை; உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் குரு வருகிறார்.

இதனால் உங்களுக்கு பண மழை கொட்டும் என்பார்களே அது இப்போது வரப்போகிறது. இந்த முறை சிம்ம ராசிக்கு குரு 2, 4 , 6 இடத்தில் பார்க்கிறார். இதனால் பணம் உங்களுக்கு கொட்டோ கொட்டு என்று கொட்டும். உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள். லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு. பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு திடீரென 2- 3 மடங்கு சம்பளம் உயரும் வாய்ப்புகளும் கூட உண்டு. பிரச்சனைகள் தீரும்: இந்த குரு பெயர்ச்சி காரணமாக உங்களுக்கு
குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் தீரும். கணவன் மனைவி பிரச்சனை தீரும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். அப்பா உடன் இருந்த பிணக்கு சரியாகும். உங்கள் தங்கை, அக்காவின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் கூட சரியாகும். வேலை மாறும்: ஆனால் இந்த குரு பெயர்ச்சி காரணமாக சில கெட்ட விஷயங்களும் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. 10ல் குரு இருந்தால் பதவி போகும். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

உங்கள் வேலையில் நல்ல கவனத்துடன் இருக்கவும். இல்லையென்றால் வேலை போகும் ஆபத்தும் உள்ளது. நிலம், வீடு வாங்கும் போது ஆவணங்களை சரி பார்க்கவும். விவகாரம் உள்ள நிலங்களை வாங்க வேண்டாம். ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளதால் எதையும் யோசித்து செய்யுங்கள். ரிஸ்க் வேண்டாம். பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபடுவது நல்ல பலனை தரும்.

Back to top button