ஜோதிடம்

இந்த சான்சை விட்டுடாதீங்க.. மிதுன ராசிக்கு “இதை” விட வேற வாய்ப்பே கிடைக்காது.. குரு பெயர்ச்சி பலன்!

குரு பெயர்ச்சி மிதுன ராசிகாரர்களின் வாழ்க்கையில் சில முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த போகிறது.. அது எப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றும் .. இந்த குரு பெயர்ச்சி மூலம் என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம். மேஷ ராசியில் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். மே 1ம் தேதி நடக்கும் இந்த மாற்றத்தால் பல ராசிகாரர்களின் வாழ்க்கை அப்படியே மாற போகிறது.

குரு பெயர்ச்சி நடக்கும் போதெல்லாம் பல ராசிகளுக்கு வாழ்க்கை அப்படியே பாசிட்டிவாக மாறிய சம்பவங்கள் நடந்துள்ளன. ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். அந்த வகையில் மிதுன ராசிக்கான பலன்களை இங்கே பார்க்கலாம்.

காசு நிறைய வரும் – செலவும் வரும்: உங்களுக்கு 12ம் வீட்டில் குரு பெயர்ச்சி ஆகிறார். இதனால் கண்டிப்பாக உங்களுக்கு நிறைய பண வரவு இருக்கும். நீங்கள் எதிர்பார்த்து இருந்த இடங்களில் இருந்து எல்லாம் பணம் வரும். சமயங்களில் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து கூட பணம் உங்களை தேடி வரும்.

நீண்ட நாட்களாக நீங்கள் கடன் கொடுத்து திரும்பி கொடுக்காதவர்கள் கூட இப்போது நீங்கள் கேட்காமல் பணம் கொடுப்பார்கள். ஆனால் இதனால் கண்டிப்பாக நிறைய சுப செலவுகள் இருக்கும்.

சுப செலவாக மாற்றுங்கள் – சான்ஸ் கிடைக்காது: ஆம் காசு எவ்வளவு வந்தாலும் பணம் கையில் இருக்காது. வருகின்றன பணம் எல்லாம் செலவிற்கே போதுமானதாக இருக்கும். இதை சமாளிக்க நீங்கள் சுப செலவுகளை செய்யலாம். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு 4,6,8ஆம் இடங்களில் வர உள்ளது. அதனால் சுப செலவுகள் என்பது உறுதியாக இருக்கும்.

பார்வை – வீடு வாங்கலாம்: குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு 4,6,8ஆம் இடங்களில் வருவதால் வீடு வாங்கும் ராசி உள்ளது. நிலம் வாங்கும் ராசியும் இருக்கிறது. நீங்கள் சுப செலவு காரணமாக திருமண செலவுகள், வீடுகள், புதிய வாகனங்களை வாங்கலாம்.

ஆரோக்கியத்தில் கவனம் – உறவில் கவனம்: ஆனால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சமயங்களில் கிட்னி பிரச்சனைகள் ஏற்படலாம். அதேபோல் வயிற்று பிரச்சனைகள் கூட அதிகம் ஏற்படலாம்.

சுப செலவு இருக்கிறது என்பதால் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். முதலீடுகளில் அகலக்கால் வைக்க வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எந்த விதமான முதலீடுகளையும் செய்வது நல்லது. பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் சுப செலவாக மாற்றுங்கள்.

மே 13, 2025 வரை உங்களுக்கு திருமணம் கைகூடுவதில் கொஞ்சம் தாமதம் ஏற்படலாம். மண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே கசப்பான உறவு ஏற்படலாம். அதனால் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

தொழில் வளர்ச்சி, சொத்து வளர்ச்சி கொடுக்கும் குரு பெயர்ச்சி உங்களுக்கு ஆரோக்கியத்திலும், குடும்பத்திலும் சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்கவும்.

Back to top button