தாயகம்

விடிய விடிய விருந்து! பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

முகநூல் விருந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த தம்புள்ளை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை கந்தளம பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு பேஸ்புக் ஊடாக அங்கத்தவர்களை வரவழைத்து கேளிக்கை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விடிய விடிய விருந்து நிகழ்வு இரவு முதல் மறுநாள் காலை வரை விருந்து நடைபெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். விருந்தில் தம்புள்ளை மாநகர சபையில் கடமையாற்றிய சம்பத் விஜயதுங்க என்ற இளைஞர் பாடியும் நடனமாடியும் மகிழ்வித்த நிலையிலேயே திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


அதேவேளை மாநகர சபை ஊழியர் கேளிக்கை நிகழ்வில் அதிகளவான போதைப்பொருள் பாவித்து உயிரிழந்ததாக தென்னிலங்கை சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button