ஜோதிடம்

2024ம் ஆண்டு ரிஷப ராசியினருக்கு எப்படி இருக்கும்?

வலுத்து நிற்கும் சனி.. ஜென்ம குரு லாபமா?

ரிஷப ராசிக்கு 2024 ம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

வேலை

சனி உங்களுக்கு இந்த ஆண்டில் கொஞ்சம் சாதகமாக இருக்கிறார். குறிப்பாக 10-ஆம் இடத்தில் அவர் மிகவும் சாதகமாக இருக்கிறார். ஆகையால், உங்களது வேலை தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில், நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் எந்த தயக்கமும் காட்ட வேண்டாம். தைரியமாக நீங்கள் களம் இறங்கலாம்.

செல்வம் 

பதினொன்றாம் இடத்தில் ராகு பகவான் இருக்கிறார். அவர் சனியை விட இன்னும் நன்றாக உங்களுக்கு சில விஷயங்களை செய்யப் போகிறார். அதனால் உங்களுக்கு திடீரென்று அதிர்ஷ்டம் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

காதல் 

மே மாதத்திற்கு பிறகு குருவானவன் ஜென்ம குருவாக மாறுகிறான். அதனால் உங்களது இயல்பில் தொந்தரவு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 2ம் இடத்தில், எந்த கிரகங்களிலாலும் உங்களுக்கு தடையோ, தோஷமோ இல்லை. 

குருவானவன் ஜென்ம குருவாக மாறும் பட்சத்தில், அவனுடைய பார்வையானது ஏழாம் இடத்தில் சென்று பதியும். அது உங்களது பிசினஸ் உறவுகள், வாழ்க்கை உறவுகளில் நல்ல பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால், மே மாதத்திற்கு பிறகு வரன் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தலாம். 

கல்வி

ராகு 11ஆம் இடத்தில் இருப்பதால் நீங்கள் விடுதியில் தங்கி படிப்பவர் என்றாலோ, ஆன்லைனில் படிப்பவராக இருந்தாலோ உங்களுக்கு அது நல்ல விதமாக அமையும். 

ஆரோக்கியம் 

கேது ஐந்தாம் இடத்தில் இருப்பதால், சின்ன சின்ன உபாதைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் பெரிய அளவில் உடல் உபாதைகள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. சில பேருக்கு சில உணவுகளால், ஒவ்வாமை, அலர்ஜி உள்ளிட்டவை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அதையும் நீங்கள் ஒரு சரியான மருத்துவரை அணுகி  சரிபடுத்துவீர்கள் என்றால், அதுவும் உங்களுக்கு சரியாகி போகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Back to top button