பிரான்ஸ்
🇫🇷பிரான்ஸில் வார இறுதி நாட்களில் நிறுத்தப்படும் மெற்றோ!
இன்று முதல் வரும் ஏப்ரல் மாதம் வரை 14 ஆம் இலக்க மெற்றோ சேவைகள் வார இறுதி நாட்களில் நிறுத்தப்பட உள்ளன.
விஸ்தரிப்பு பணிகள் காரணமாக இந்த சேவைத்தடை ஏற்பட உள்ளது.
வார இறுதி நாட்களில் சேவைத்தடையும், திங்கள் முதல் வியாழக்கிழமை வரை தினமும் இரவு 10 மணி முதல் சேவை நிறுத்தமும் இடம்பெறும்.
மார்ச் 31 ஆம் திகதி வரை இந்த சேவைத்தடை ஏற்படும். அதேவேளை இறுதியாக, ஏப்ரல் 1 ஆம் திகதி திங்கட்கிழமையும் சேவைகள் தடைப்படும்.