பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் மருத்துவ அவசரப்பிரிவில் குழந்தைகள்! வெளியான காரணம்!

அண்மைக்காலமாக பிரான்சில் குழந்தைகள் அதிகம் மருத்துவமனைகளின் அவசரப் பிரிவில் அனுமதிக்க படுவதாக சுகாதாரம் அமைச்சு அறிவித்துள்ளது. ஏழைகளின் குழந்தைகள், பணக்காரர்களின் குழந்தைகள் எனும் வேறுபாடுகள் இன்றி சுமார் 39 000 மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஆண்டொன்றுக்கு அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம் நகரங்கள், புறநகரங்கள் எனும் வேறுபாடு இன்றி சுவாசக் காற்று எங்கும் மாசுபட்டுள்ளது. சுமார் 11,000 மூன்று வயது குழந்தைகள் ஆஸ்துமாவுக்காகவும், 28,000 குழந்தைகள் மூச்சுக்குழாய் அழற்சிக்காகவும் அவசரமாக அனுமதிக்கப்படுகிறார்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button