பிரான்ஸ்

பிரான்ஸில் ஒரு துயர சம்பவம்! நால்வர் பலி!

பிரான்சில் பனிச்சறுக்கு விளையாடச் சென்ற ஒன்பது பேர் பனிப்பாறைச்சரிவில் சிக்கிய நிலையில், அவர்களில் நான்கு பேர் உயிரிழந்துவிட்டார்கள். பனிச்சறுக்கு விளையாடச் சென்ற குழு
நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம், பிரான்சிலுள்ள Val d’Enfer என்னுமிடத்துக்கு, ஒன்பது பேர் அடங்கிய குழு ஒன்று பனிச்சறுக்கு விளையாடச் சென்றுள்ளது. அப்போது திடீரென ஒரு பனிப்பாறைச் சரிவு உருவாக, அந்த ஒன்பது பேரும் பனிக்குள் புதைந்துள்ளனர்.

அந்தக் குழுவில் காயமடையாத இருவர் உதவி கோரி அழைப்பு விடுக்க, பனிக்கடியில் சிக்கிய மூன்று பேர் தங்கள் locator beaconகளை இயங்கச் செய்துள்ளார்கள்.
மீட்புக் குழுவினர் ஐந்து பேரை மீட்ட நிலையில், பனிக்குள் சிக்கிய நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்கள்.


உயிரிழந்தவர்களில், அப்பகுதியில் புகழ்பெற்ற வழிகாட்டியாகிய David Vigouroux (50) என்பவரும் ஒருவர் ஆவார். பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள். Val d’Enfer என்பதற்கு நரகப் பள்ளத்தாக்கு என்று பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button