பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் மோதியெறியப்பட்ட காவல்துறை!

நேற்று வெள்ளிக்கிழமை Nord மாவட்டத்திலுள்ள Halluin நகரத்தில் வீதிச் சோதனையின் போது, காவற்துறையினரின் கட்ளைக்கு இணங்க மறுத்த நபர், சிற்றுந்தினால் காவற்துறை வீரனையும் மிக மோசமாக மோசமாகத் தாக்கி விட்டுத் தப்பியோடி உள்ளான்.

காவற்துறைனரின் தொழிற்சங்கத்தின் சார்பில் வில்லியம் மோரி அவர்கள் இந்தச் சம்பவத்தின் போது கண்காணிப்பு ஒளிப்பதிவில் கிடைத்த காட்சி, காவற்துறையினரின் அபாய நிலையை மக்களிற்கு விளங்க வைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
காவற்துறையினர் மிகவும் அபாயமான நிலையிலும், மிகவும் துணிவுடன் செயற்பட்டுள்ளார்கள் என உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனன் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியான காவற்துறையினரின் நடவடிக்கையினால் இந்தக் குற்றவாளி பெல்ஜிய எல்லைக்கு முன்னதாகக் கைது செய்யப்பட்டுள்ளான். இவன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளான். இவன் பெல்ஜியக் காவற்துறையினராலும் தேடப்பட்டு வந்தவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Back to top button