பிரான்ஸ்

பிரான்ஸில் அதிர்ச்சி! ஒரு மில்லியன் யூரோ நகைகள் கொள்ளை!

பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் நேற்று மார்ச் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. rue de Berri வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மூன்று ஆயுதமேந்திய கொள்ளையர்கள், வீட்டியில் பாதுகாப்பு பெட்டகத்தினை உடைத்து அதில் இருந்த நகைகளை கொள்ளையிட்டுள்ளனர்.

ஒரு மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகளை கொள்ளையிட்டுள்ளனர். குறித்த வீடு மெக்ஸிக்கோவைச் சேர்ந்த ‘ஆடை வடிவமைப்பாளர்’ ஒருவருடையது எனவும், மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button