தாயகம்

சினிமாவை மிஞ்சிய சம்பவம்! பெண்கள் நால்வருக்கு நேர்ந்த கதி!

மீகஹகிவுல – தல்தென பகுதியில் நேற்று (01) மாலை 6.00 மணியளவில் இரண்டு பெண் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


மீகஹகிவுல – தல்தென, கல்கெலந்த பிரதேசவாசிகளே இவ்வாறு தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் பெண் இந்த தாக்குதலில் காயமடைந்த ஆறு வயது சிறுமி மற்றும் இரண்டு பெண்கள் மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

சம்பவத்தில் ஆபத்தான நிலையில் இருந்த பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை வைத்தியசாலை பொலிஸார் மற்றும் கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Back to top button