தாயகம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு! கைதான வர்த்தகர்கள்!

பெருமளவான சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இரண்டு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று நடத்திய சோதனையின்போதே சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் நேற்று (07) மற்றும் நேற்றுமுன்தினம் (06) கைது செய்யப்பட்டுள்ளனர். மறைத்து கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள்
இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி ஐம்பத்து இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா எனவும் இவை வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களில் ஒருவர் நிட்டம்புவ, ருக்கவில பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதான வர்த்தகர் ஆவார். அவர் கொண்டு வந்த 02 பொதிகளில் 150 அட்டைப்பெட்டிகள் “மன்செஸ்டர்” ரக சிகரெட்டுகள் மற்றும் தலா 06 “கோல்ட் லீஃப்” மற்றும் “பிளாட்டினம்” ரக சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மற்றைய சந்தேகநபர் தங்காலை பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய வர்த்தகர் என்பதோடு அவரது 02 பயணப் பொதிகளில் 100 அட்டைப்பெட்டிகள் மான்செஸ்டர் ரக சிகரெட்டுகளை மறைத்து வைத்திருந்த போதே அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Back to top button