தாயகம்

இலங்கையில் அடுத்தடுத்து இடம்பெற்ற பயங்கர சம்பவம்! இருவர் பலி! பரபரப்பு தகவல்!

#france news#

அம்பலாங்கொடை, கலகொடவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கலகொடவில் உள்ள கடையொன்றிற்குள் T56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் இன்றிரவு (11-03-2024) இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் ஒருவரும் மேலும் இரு ஆண்களும் கல்லிந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button