முடிவுக்கு வரும் வேலை நிறுத்தம்!
ஈஃபிள் கோபுர ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது முடிவுக்கு வருகிறது. பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு ஏற்பட்டதை அடுத்து நாளை ஞாயிற்றுக்கிழமை கோபுரம் மீண்டும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட உள்ளது. கடந்த ஐந்து நாட்களாக தொடர்ச்சியாக ஈஃபிள் கோபுர ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
கோபுரம் பொதுமக்கள் பார்வைக்கு தடைப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று சனிக்கிழமை ஈஃபிள் கோபுர பராமரிப்பு அதிகாரிகளுக்கும் Société d’Exploitation de la Tour Eiffel (Sete), தொழிற்சங்கத்தின் ஊழியர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாட்டில் முடிந்தது.
2031 ஆம் ஆண்டு வரை ஈஃபிள் கோபுரம் மீது 380 மில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய முன்வந்ததாகவும், அதைத் தொடர்ந்தே வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை வழமை போன்று கோபுரம் திறக்கப்படும்.