பிரான்ஸ்

பிரான்ஸில் பரிதாபமாக பலியான அகதி! இருவர் மாயம்!

பா-து-கலே கடற்பிராந்தியம் வழியாக சிறிய மீன்பிடி படகில் பிரித்தானியா நோக்கி செல்ல முற்பட்ட அகதி ஒருவர் பலியாகியுள்ளார். அவருடன் பயணித்த மேலும் இருவர் தொடர்பில் தகவல்கள் இல்லை. இன்று பெப்ரவரி 28 ஆம் திகதி புதன்கிழமை நண்பகலுக்கு சற்று முன்னதாக சிறிய படகு ஒன்றில் இருந்து அகதி ஒருவர் மீட்கப்பட்டார்.

அவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதில், அவருடன் மேலும் மூவர் பயணித்ததாகவும், அவர்கள் மூவரும் நீரில் மூழ்கியதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் கடற்படையினர் தேடுதல் மேற்கொண்டு ஒருவரது சடலத்தை கண்டுபிடித்து மீட்டனர்.

அவர்கள் சிறிய மீன்பிடி படகை மாத்திரம் நம்பி பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன இருவர் தொடர்பிலும் தகவல்கள் இல்லை. அவர்கள் மிக நீண்ட நேரமாக தேடப்பட்டனர்.

Back to top button