பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் குறி தவறியதில் ஒருவர் பலி!

வேட்டைக்காரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் மற்றொரு வேட்டைக்காரர் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை Meurthe-et-Moselle நகரில் இடம்பெற்றுள்ளது. 72 வயதுடைய ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். 52 வயதுடைய ஒருவர் பன்றிக்கு குறிவைத்ததில், குறி தவறி குறித்த வேட்டைக்காரர் மீது துப்பாக்கிச் சன்னம் பாய்ந்துள்ளது.

இச் சம்பவ இடத்திலேயே வேட்டைக்காரர் பலியானார். துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்சின் 2022-2023 காலப்பகுதியில் இடம்பெற்ற இதுபோன்ற அசம்பாவதங்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button