பிரான்ஸ்

பிரான்ஸ் வீடு ஒன்றில் மீட்கப்பட்ட பெண்னின் சடலம்!

Montfermeil (Seine-Saint-Denis) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று பெப்ரவரி 19 ஆம் திகதி திங்கட்கிழமை பெண் ஒருவரது சடலம் மீட்க்பபட்டுள்ளது. 38 வயதுடைய பெண் ஒருவரது சடலமே மீட்கப்பட்டது.

சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பெண்ணின் கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதுடைய அவர், கத்தி ஒன்றின் மூலம் மனைவியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சில் குடும்ப வன்முறையினால் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் 94 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக 2022 ஆம் ஆண்டில் 118 பெண்கள் கொல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Back to top button