பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸ் நடு வீதியில் துப்பாக்கிச்சூடு!

Ris-Orangis (Essonne) நகரில் இடம்பெற்ற சரமாரி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த ஆயுததாரி, மகிழுந்தில் பயணித் ஒருவர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். பத்தில் இருந்து பன்னிரெண்டு தடவைகள் வரை துப்பாக்கியால் இடைவிடாது சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இன்று பெப்ரவரி 14, புதன்கிழமை காலை 8 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் அப்பகுதி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பரிசில் இருந்து 20 கி.மீ தொலைவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Ris-Orangis நகரில் இத்துப்பாக்கிச்சூட்டு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் அவ்விடத்திலேயே பலியானார்.

Back to top button