மிக மோசமான நிலையில் பிரான்ஸின் பல்வேறு பாடசாலைகள்!
Seine-Saint-Denis மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகள் மிக மோசமான நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு, பாடசாலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி முதல் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். 93 ஆம் மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள பாடசாலைகளின் நிலமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், கதிரை மேசைகள் சேதமடைந்தும், கழிவறைகள் உடைந்தும் சிதிலமடைந்தும் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
Saint-Denis இல் உள்ள பாடசாலை ஒன்றின் கழிவறைக் கூரை இடிந்து விழுந்துள்ளது. அதில் தற்போதும் பாரிய அளவிலான ஓட்டை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aulnay-sous-Bois நகரில் உள்ள பாடசாலை ஒன்றின் கழிவறை இருக்கை உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. அதே Aulnay-sous-Bois அகரில் உள்ள மற்றுமொரு பாடசாலையில் கதிசை மேசைகள் அனைத்தும் உடைந்து காணப்படுகிறது.
அதன் புகைப்படங்களை சுவரொட்டிகளாக வைத்துக்கொண்டு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கோரி Seine-Saint-Denis inter-union தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்களே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.