பிரான்ஸில் இந்த சலுகை இனி கிடையாது! வெளியான புதிய சட்டம்!
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்னும் ஒரு சலுகை உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு சலுகையாகும். ஆனால், பிரான்சில் இனிமேல் அந்த சலுகை கிடையாது என அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டிலுள்ள பல்பொருள் அங்காடிகள், இனி சில குறிப்பிட்ட பொருட்களுக்கு 34 சதவிகிதத்துக்குமேல் தள்ளுபடி வழங்க முடியாது. அதற்காக பிரான்ஸ் அறிமுகம் செய்யும் சட்டம், பன்னாட்டு நிறுவனங்களின் சலுகை விற்பனை காரணமாக பாதிக்கப்படும் சிறிய நிறுவனங்களை பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
ஷாம்பூ, டூத்பேஸ்ட், டாய்லட் பேப்பர் முதலான பொருட்களுக்கு 34 சதவிகிதத்துக்குமேல் தள்ளுபடி வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்னும் ஒரு சலுகை இனி பிரான்சில் அந்த பொருட்களுக்குக் கிடையாது. இந்த விதி இம்மாதம், அதாவது மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உணவுப்பொருட்கள் மீதான இத்தகைய கட்டுப்பாடு கடந்த ஆண்டு மார்ச் மாதமே அமுலுக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. சரி இப்படி ஒரு சட்டம் வந்துள்ளதே, மக்கள் வருத்தப்பட மாட்டார்களா என்று பார்த்தால், பலர் இந்த விதி தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, இப்படி தள்ளுபடி அறிவிப்பதால், பொருளின் உண்மையான விலை என்ன என்பது வாடிக்கையாளர்களுக்கு தெளிவாகத் தெரியும் நிலை உருவாவதுடன், தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு வரும் நிலையில், தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காக தேவைப்பட்ட பொருட்களை விட ஆசைப்படும் பொருட்களை எல்லாம் அத்தியாவசிய அல்லது உடனடித் தேவையிலாமல் வாங்கிக் குவிப்பது இதனால் தவிர்க்கப்படுவதாக பலர் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்!